Wednesday, June 30, 2010

யாருக்கு என்னென்ன?..

யாருக்கு என்னென்ன?..

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
அப்புறம்?....
பதவி மகனுக்கு
பட்டை நாமம் மக்களுக்கு

Wednesday, June 9, 2010

ஏழு விஷயங்கள்.... (படித்ததில் பிடித்தது)

ஏழு விஷயங்கள்....

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

Thursday, April 22, 2010

முத்தத்தின் உண்மை வகைகள்

அம்மாவின் முத்தம் பாசத்தின் உச்சம்
அப்பாவின் முத்தம் அதிகார பகிர்வு
அண்ணனின் முத்தம் தோழமை உணர்வு
அக்காவின் முத்தம் அக்கறை வெளிப்பாடு
மாமாவின் முத்தம் ஆச்சர்ய சந்தோசம்
அத்தையின் முத்தம் அகால பெருமூச்சு
சித்தப்பாவின் முத்தம் குறும்பான விளையாட்டு
சித்தியின் முத்தம் கலப்பட இனிப்பு
பாட்டியின் முத்தம் அறியாமை கலப்பு
தாத்தாவின் முத்தம் உண்மையில்லா நடிப்பு
தோழியின் முத்தம் சொல்லமுடியா கூச்சம்
தோழனின் முத்தம் விவரமில்லா விளையாட்டு

Friday, March 26, 2010

காதலா காதலியா கடவுளா

காதல்தான் காதலியை விட மிக அழகு.
அதனாலதான் காதலோடு தொடர்புடைய எல்லாமே மிக அழகாக தெரிகிறது.
காதலி சேர்ந்தாலும் சரி பிரிந்தாலும் சரி, காதலை மட்டும் மனதை விட்டு பிரிக்காதீர்கள்.
வாழ்க்கை என்றும் அழகாக தெரிய காதலே காதலியை விட முக்கியம்.
காதல் மட்டும் இருந்தால் காதலி மட்டுமல்ல கடவுளும் தேடி வருவான்.

நண்பனின் காதல் பற்றி..

எனக்கு தமிழ் மட்டுமே நன்றாக
தெரியுமென்பதால் மட்டுமல்ல,
உனக்கு தமிழ் தெரிந்திருந்தால்
என் கவிதையை எவ்வளவு ரசிப்பாய் என்ற
என் நினைப்புமே
என் கவிதையை மேலும் அழகாக்குகின்றன.

என்றாவது ஒரு நாள்,
உன்னை நினைத்துதான் நான் இந்த கவிதையை எழுதினேன் என்று
அறியாமல் போய் விடுவாயா என்ன?

Thursday, September 17, 2009

அரசியல்வாதிகளின் முதலீடு...

அரசியல்வாதிகளின் முதலீடு...

மக்களின் மறதி - அரசியல்வாதிகளின் முதல் முதலீடு
திருடிய வரிப்பணம் - அரசியல்வாதிகளின் இரண்டாவது முதலீடு
சாதி பிரிவினை - அரசியல்வாதிகளின் மூன்றாவது முதலீடு
பொய் - அரசியல்வாதிகளின் நான்காவது முதலீடு
திசை திருப்புதல் - அரசியல்வாதிகளின் ஐந்தாவது முதலீடு
தந்திரம் - அரசியல்வாதிகளின் ஆறாவது முதலீடு
துரோகம் - அரசியல்வாதிகளின் ஏழாவது முதலீடு
மொழியறிவு - அரசியல்வாதிகளின் எட்டாவது முதலீடு